சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே இளம் வயதில் சிஎஸ்கே கோட்டையில் அரைசதம் அடித்த சிஎஸ்கே வீராக சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனையுடன் 19 வயதுக்குள்ளாக தனிப்பட்ட நபர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆயுஷ் மாத்ரே டாப் 3ல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளார்.
சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து 209/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 210/5 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே நம்.3ல் களமிறங்கி 43 பந்துகளில் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதுவரை 19 வயதுக்குள்ளாக அதிகபட்ச ரன்கள் குவித்தவர்களில் வைபவ் சூர்யவன்ஷிக்குப் பிறகு இரண்டு இடங்களையும் ஆயுஷ் மாத்ரே பிடித்துள்ளார்.
19 வயதுக்குள்ளாக அதிக ரன்கள் குவித்த டாப் 3 வீரர்கள்
1. வைபவ் சூர்யவன்ஷி - 101 ரன்கள் (14 ஆண்டுகள், 32 நாள்கள், 2025)
2. ஆயுஷ் மாத்ரே - 94 ரன்கள் (17 ஆண்டுகள், 291 நாள்கள், 2025)
3. ஆயுஷ் மாத்ரே - 73 ரன்கள் (18 ஆண்டுகள், 221 நாள்கள், 2026)
Summary
CSK Player Ayush Mhatre Secures a Spot in the Record Books!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறிமுக போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் அராஃபத் மின்ஹாஸ்!

36 பந்துகளில் சதம்; ரத்தம் சொட்ட விளையாடிய இளம் வீரரை குறிவைக்கும் சிஎஸ்கே! யார் இந்த ஆயுஷ் வர்தக்?

வருத்தமாக இருக்கிறது..! ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஆயுஷ் மாத்ரேவின் பதிவு!







