ஜிம்பாப்வேவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கிறது.
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அணியினர் ஆண்டுதோறும் டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றனர். இந்தத் தொடர்களுக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.
அந்த வகையில், நிகழாண்டுக்கான ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
2026 முதல் 2027 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இவ்விரு அணிகளும் இரண்டு தொடர்களில் விளையாடுகின்றன. இந்திய அணி முதல் தொடரில் ஜூலை 23, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விளையாடுகிறது. இந்த மூன்று போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் திடலில் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து இந்தியா வரும் ஜிம்பாப்வே அணியினர் ஜனவரி 3, 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடைபெற உள்ளன.
டி20 சாம்பியனான இந்திய அணி, கடந்த 2024 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது முதல் தொடராக ஜிம்பாப்வேவுடன் விளையாடியிருந்தது. அதில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
India will head to Zimbabwe for a three-match T20I series in July for their first assignment since clinching their World Cup title this year.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் பங்கேற்றதால் பிஎஸ்எல் தொடரில் விளையாட ஜிம்பாப்வே வீரருக்குத் தடை!

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்
டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


