டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய மகளிரணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்திய மகளிரணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
போட்டிகள் அனைத்தும் டர்பன், ஜோஹன்ஸ்பர்க் மற்றும் பெனோனியில் நடைபெறுகின்றன. இந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மார்ச் 24) அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட இந்திய அணியை ஹர்மன்பிரீத் கௌர் கேப்டனாக வழிநடத்துகிறார். ஸ்மிருதி மந்தனா துணைக் கேப்டனாக செயல்படுகிறார்.
அண்மையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய அனுஷ்கா சர்மா முதல் முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்
ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்குர், கிராந்தி கௌட், ஸ்ரீ சரணி, ஷ்ரேயங்கா பாட்டீல், கஷ்வீ கௌதம், பார்தி ஃபுல்மாலி, உமா சேத்ரி, அனுஷ்கா சர்மா.
Summary
The Indian women's team will tour South Africa to play a T20 series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








