40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

இந்திய ரசிகர்களுக்காக 1 மணிநேரம் முன்னதாக நடைபெறும் இங்கிலாந்து தொடர்!

இந்திய ரசிகர்களுக்காக 1 மணிநேரம் முன்னதாக நடைபெறும் இங்கிலாந்து தொடரைப் பற்றி...

News image

இந்திய அணியினர்.

Updated On :9 ஜூன் 2026, 5:41 pm IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி தொடர் ஒரு மணி நேரம் முன்னதாக நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், 15 வயதான சூர்யவன்ஷிக்கு முதல்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், இங்கிலாந்து தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு (உள்ளூர் நேரப்படி 6.30 மணி) எனத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்திய பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போக்கில், 3 டி20 போட்டிகள் 1 மணிநேரம் முன்னதாக தொடங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முதலாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் இரவு 11 மணியிலிருந்து ஒரு மணிநேரம் குறைத்து இரவு 10 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 8 மணியிலிருந்து 7 மணிக்குத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

ECB has shifted the timing of 3 T20Is one hour earlier to maximize the TV viewership in the month of July!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.