உலகக் கோப்பை: இருவர் அரைசதம்; தென்னாப்பிரிக்காவுக்கு 233 ரன்கள் இலக்கு!
உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளயாடிய வங்கதேசம் 6 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் எடுத்துள்ளது.


உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளயாடிய வங்கதேசம் 6 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, வங்கதேசம் முதலில் பேட் செய்தது.
முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஷோர்னா அக்தர் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷர்மின் அக்தர் 50 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன்களும், ஃபர்ஹானா ஹோக் 30 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் நான்குலுலேகோ மிலாபா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நடின் டி கிளர்க் மற்றும் சோல் டிரையான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...