உலகக் கோப்பை: நியூசிலாந்து 231 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!
மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 47.5 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சோஃபி டிவைன் 98 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ப்ரூக் ஹால்லிடே 45 ரன்களும், ஜியார்ஜியா பிலிம்மர் 31 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் நான்குலுலேகோ மிலாபா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மாரிஸேன் காப், அயபோங்கா காஹா, நடின் டி கிளர்க் மற்றும் சோல் டிரையான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.
இதையும் படிக்க: லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக இந்திய வீரர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...