இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பரில் நடைபெற உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நவம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரின் மூலம், அடுத்தாண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் அணிகள் முன்னேற்றம் அடைய வாய்ப்பு கிடைக்கும். கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியாவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.
மேலும், கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லியான், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.
இத்தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஏற்கெனவே தங்களது பயிற்சியை ஆரம்பித்துவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

மகாநதி தொடரில் திடீர் திருப்பம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஒரு வாரம் நடந்ததை ஒரு நாளில் பார்க்க... அய்யனார் துணை தொடரின் புதிய முயற்சி!

இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் - 2 தொடர்!
வீடியோக்கள்

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

