வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

ஹாலண்ட் அசத்தல்! பிஃபா வரலாற்றின் நாக்-அவுட் சுற்றில் நார்வேவுக்கு முதல் வெற்றி!

பிஃபா வரலாற்றின் நாக்-அவுட் சுற்றில் நார்வே அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளதைப் பற்றி...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் எர்லிங் ஹாலண்ட். - படம்: ஏபி.

Updated On :1 ஜூலை 2026, 12:32 pm IST

ஐவரி கோஸ்ட் அணியை வீழ்த்தி பிஃபா வரலாற்றின் நாக்-அவுட் சுற்றில் நார்வே அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கிய பிஃபா உலகக் கோப்பையின் 23-வது தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ரவுண்ட் ஆஃப் 32-ல் அணிகள் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் அர்லிங்டனில் டல்லாஸ் கால்பந்து திடலில் நேற்றிரவு (ஜூன் 30) நடைபெற்ற போட்டியில் நார்வே மற்றும் ஐவரிகோஸ்ட் ஆகிய அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், நார்வே வீரர் அன்டோனியோ நுசா 39-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார். இதனால், நார்வே அணி முதல் பாதியில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது பாதியில் 60-வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட்டின் இனாவ் ஔலாய் வெளியேற அவருக்குப் பதிலாக மாற்று வீரராக அமத் டயலோ களமிறங்கினார். அசத்தலாக விளையாடிய அவர் 74-வது நிமிடத்தில் கோல் அடித்து 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய நார்வே அணியில், நட்சத்திர வீரர் எர்லின் ஹாலண்ட் 86-வது நிமிடத்தில் கோல் போட்டு அணிக்கு முன்னிலை பெற வைத்தார். இதனால், நார்வே அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஐவரி கோஸ்ட் அணியால் கடைசி வரை பதிலடி கொடுக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில், 2-1 என்ற கணக்கில் ஐவரி கோஸ்ட் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றில் நார்வே அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஐந்து முறை சாம்பியனான பிரேசிலை நார்வே எதிர்கொள்ளவிருக்கிறது.

Summary

FIFA World Cup 2026: Norway survived a fierce Ivory Coast fightback to punch their ticket to the Round of 16. Now comes the ultimate test as Antonio Nusa, Erling Haaland and company prepare to take on five-time champions Brazil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.