/

அறிமுக உலகக் கோப்பையில் அசத்திய எர்லிங் ஹாலண்ட்..! முதலிடத்தில் நார்வே அணி!

அறிமுக கால்பந்து உலகக் கோப்பையில் அசத்திய நார்வே அணியின் எர்லிங் ஹாலண்ட் குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் எர்லிங் ஹாலண்ட். - படம்: ஏபி

Updated On :17 ஜூன் 2026, 8:22 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் இராக் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் நார்வே அணி 4 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குரூப் ஐ பிரிவில் இடம்பெற்றுள்ள நார்வே அணி இந்த வெற்றியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிரான்ஸ் அணியும் அபார வெற்றி பெற்றாலும் கோல்கள் வித்தியாசத்தில் நார்வே அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் நார்வே அணியும் இராக் அணியும் மோதின. இந்தப் போட்டியில் அறிமுகமான எர்லிங் ஹாலண்ட் 2 கோல்கள் (29’, 43’), 1 அசிஸ்ட் செய்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் 39ஆவது நிமிஷத்தில் இராக் அணி ஆறுதல் கோல் அடித்தது. கடைசி கட்டத்தில் 90+6ஆவது நிமிஷத்தில் இராக் அணியின் ஆயுமென் ஹுஸைன் ஓன் கோல் அடித்து நார்வே அணிக்கு உதவினார்.

இராக் அணி 1986ல் முதல்முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்றது. இரண்டாவது முறையாக இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றிருக்கிறது.

மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியில் அசத்திய எர்லிங் ஹாலண்ட் முதல் உலகக் கோப்பையிலேயே 2 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.

Summary

Erling Haaland scores twice, adds assist in World Cup debut as Norway tops Iraq 4-1 in Group I

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.