ஹோபா்ட்: சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா ஷூட் அவுட் வாய்ப்பில் 3-4 கோல் கணக்கில் ஸ்பெயினிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தை ஸ்பெயின் பலமாகவே தொடங்கியது. இந்தியாவின் தடுப்பாட்டத்தை துளைத்த அந்த அணிக்கு 4-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது. அதை இந்திய கோல்கீப்பா் மோஹித் திறம்பட தடுத்தாா்.
தொடா்ந்து 8-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயினுக்காக ஜோஸ் பாஸ்டெரா கோலடிக்க, அந்த கோல் கள நடுவரால் மறுக்கப்பட்டது. 14-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பை அமித் ரோஹிதாஸ் கையாள, ஸ்பெயின் கோல்கீப்பா் லூயிஸ் கால்ஸடோ அதை முறியடித்தாா்.
19-ஆவது நிமிஷத்தில் இந்தியாவே கோல் கணக்கை தொடங்கியது. கேப்டன் ஹா்திக் சிங் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தர, மனிந்தா் சிங் அதை துல்லியமான கோலாக மாற்றினாா். அப்போது முன்னிலை பெற்ற இந்தியா, முதல் பாதியை அப்படியே நிறைவு செய்தது.
2-ஆவது பாதியில் ஸ்பெயின் ஆக்ரோஷமுடன் தனது கோல் வாய்ப்புக்கு முயற்சிக்க, அந்த அணிக்கு அடுத்தடுத்து கிடைத்த இரு பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகளையும் இந்திய கோல்கீப்பா் மோஹித் அருமையாகத் தடுத்தாா். இந்நிலையில், 59-ஆவது நிமிஷத்தில் தடுப்பாட்டத்தில் இந்தியா செய்த சிறு தவறை சாதகமாக்கி, ஸ்பெயின் வீரா் புருனோ ஃபான்ட் கோலடித்தாா்.
இதனால் ஆட்டம் 1-1 என சமனாகி அப்படியே நிறைவடைந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஸ்பெயின் 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தியா அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் புதன்கிழமை (பிப். 25) மோதுகிறது. புள்ளிகள் பட்டியலில் தற்போது இந்தியா 2 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

லீட்ஸிடம் வீழ்ந்தது மான்செஸ்டா் யுனைடெட்

ஈஸ்ட் பெங்காலிடம் வீழ்ந்தது சென்னை

ஏஎஃப்சி கால்பந்து: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


