லஞ்சம் வாங்கிய புகார்: 3 கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ நற்சான்றிதழ்!
ஒரு கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் ஈடுபடும்போது அவர்களுக்கு ஐசிசிதான் பொறுப்பு. விசாரணை செய்து ஐசிசிதான் பதில் ...


முன்னணி கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் லஞ்சம் வாங்கியதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றம் சாட்டினார். இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்து 3 ஐபிஎல் வீரர்களும் நற்சான்றிதழ் அளித்துள்ளது.
ஐபிஎல் ஊழலில் சிக்கி, இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்துள்ள லலித் மோடி சனிக்கிழமை அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார். முன்னணி கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் கடந்த 2013-ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் வாங்கினர். லஞ்சம் கொடுத்த தொழிலதிபரும் சிக்கியுள்ளார். இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன்னுக்குத் தான் கடிதம் எழுதியதாகவும், அதில் சம்பந்தபட்ட வீரர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளதாகவும் லலித் மோடி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்தப் புகாரை ஐசிசி-யின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு ரிச்சர்ட்சன் அனுப்பி வைத்ததாகவும் லலித் மோடி தெரிவித்துள்ளார். லலித் மோடி அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி) உறுதி செய்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்தப் பிரச்னை குறித்து பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் இதுபற்றி கூறும்போது:
லலித் மோடி ஐசிசிக்குக் கடிதம் எழுதினார். இதுகுறித்து எங்களுக்கு ஐசிசி தகவல் சொல்லியது. 3 கிரிக்கெட் வீரர்களும் சர்வதேச வீரர்கள். அதனால் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் எல்லைக்குள் வருவார்கள். அவர்களைப் பற்றி ஐசிசியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அதனால் அதுவே அவர்கள் விளையாட நற்சான்றிதழ் அளித்ததுபோலத்தான்.
ஒரு கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் ஈடுபடும்போது அவர்களுக்கு ஐசிசிதான் பொறுப்பு. விசாரணை செய்து ஐசிசிதான் பதில் சொல்லவேண்டும். ஏதாவது விஷயம் இருந்தால் ஐசிசி எங்களுக்குத் தகவல் சொல்லியிருப்பார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...