15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

என்.பி.ஏ.வில் விளையாட இந்தியர் தேர்வு!

19 வயது சத்னம் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 7 அடி 2 அங்குல உயரம் கொண்டவர்.

News image
Updated On :26 ஜூன் 2015, 12:33 pm

தேசிய கூடைப்பந்து கழக லீக்கில் (என்.பி.ஏ.) விளையாட பஞ்சாப் இளைஞர் சத்னம் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் என்.பி.ஏ-வில் இடம்பிடித்த 'முதல் இந்திய கூடைப்பந்து வீரர்' என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

19 வயது சத்னம் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 7 அடி 2 அங்குல உயரம் கொண்டவர். கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சிம் புல்லர், என்.பி.ஏ.வில் விளையாடும் முதல் இந்திய வம்சாவளி வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். ஆனால், இந்தியாவிலேயே பிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஒருவர் (சத்னம் சிங்) என்.பி.ஏ.வில் பங்கேற்பது இதுவே முதல்முறை.  டலாஸ் மேவரிக்ஸ் என்கிற அணிக்கு அவர் தேர்வாகியுள்ளார்.

இதுபற்றி சத்னம் சிங் பேட்டியளித்தபோது, ‘என்.பி.ஏ.வில் நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இன்னும் நிறைய இந்திய இளைஞர்கள் தேர்வாக வாய்ப்பை அளிக்கும். இனி வருங்காலங்களில் இந்தியாவிலும் கூடைப்பந்து பிரபலமாகும்.’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.