ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியின், இரண்டாவது சுற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியடைந்த போதும், அதிக கோல் வித்தியாசம் காரணமாக சென்னையின் எப்.சி. இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இரண்டாவது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தின் 2ஆவது சுற்று ஆட்டம் சென்னையின் எஃப்சி-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.
சொந்த மைதானத்தில் ரசிகர்களின் பேராதரவுடன் ஆட்டத்தை தொடங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 22-வது நிமிஷத்தில் சென்னையின் தடுப்பாட்டகாரர் பெர்னட் மென்டியின் தவறால், கொல்கத்தாவின் டீஜன் லெக்கிஜ் தனது அணியின் கணக்கை தொடங்கினார்.
தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடிய கொல்கத்தா அணியால் இடைவேளை வரை கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
பின்பாதி ஆட்டம் முடிவடையும் 87-வது நிமிஷத்தில், டீஜன் கொடுத்த அழகான கிராஸை கோலாக்கினார் கொல்கத்தாவின் இயன் ஹீயூம்.
இந்நிலையில் கொல்கத்தாவின் கோல் கீப்பரின் அஜாக்ரதையால், மெண்டோஸாவுக்கு பதிலாக உள்ள வந்த பிக்ரூ 92 நிமிஷத்தில் சென்னைக்காக கோல் அடிக்க, கொல்கத்தாவின் இறுதி கனவு தகர்ந்தது.
இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற போதும், புணேவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்ததால் 2-4 என்ற மொத்த கோல் கணக்கில் கொல்கத்தா அணி வெளியேறியது.
வரும் 20 ஆம் தேதி மர்கோவாவில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கோவாவை எதிர்கொள்கிறது சென்னை அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாளை. தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

பாளை.யில் அதிமுக பிரமுகா் மகனுக்கு அரிவாள் வெட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 82.14 சதவீதம் வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


