
சாவன் மாதக் கடைசி திங்கள்: சிவாலயங்களில் அலைமோதிய பக்தர்கள்!
வடமாநில சிவாலயங்களில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த கோயில்கள்...

சாவன் திங்கள் - ANI
சாவன் மாதக் கடைசி திங்கள் கிழமையான இன்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வடமாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வடமாநிலங்களில் ஆடி மாதத்தை சாவன் மாதம் என்றழைக்கப்படுகிறது. வட இந்திய 'பூர்ணிமாந்த' (Purnimanta) நாள்காட்டியின்படி, சாவன் மாதம் ஜூலை 30 வியாழக்கிழமை தொடங்கி, ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமையன்று நிறைவடைகிறது.
இந்துக்களின் புனித மாதமான சாவன் மாதத்தின் கடைசி திங்கள்கிழமையான இன்று, சிவபெருமானை வணங்குவோர் மங்களகரமான 'சாவன் சோமவார்' விரதக் காலத்தை இந்த திங்கள்கிழமையுடன் நிறைவு செய்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி, மதுரா, பாரபங்கி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள முக்கிய சிவன் கோயில்களில் இன்று காலை முதல் மக்கள் கூடி வருகின்றனர். வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
மங்கள ஆரத்திக்குப் பிறகு கோயில் நடை திறக்கப்பட்ட உடனேயே, 'கன்வாரியாக்கள்' (காவடி சுமந்து வரும் பக்தர்கள்) மற்றும் பிற பக்தர்கள் பாபா விஸ்வநாதருக்கு நீராபிஷேகம் செய்யத் தொடங்கினர். பக்தர்கள் மலர்களைத் தூவி வரவேற்கப்பட்டதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
சாவன் மாதத்தின் நான்காவது திங்கள்கிழமையை முன்னிட்டு, கோயில் முழுவதும் மலர்கள், ருத்ராட்ச மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 7 மணிக்குள் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கோயிலில் வழிபாடு நடத்தியதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன; அதேவேளையில் நிழல் வசதி, குடிநீர், மருத்துவ முகாம்கள் மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டறியும் மையம் போன்ற வசதிகளும் பக்தர்களுக்காகச் செய்யப்பட்டன.
மதுராவில், பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் முக்கிய சிவன் கோயில்களுக்கு வெளியே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
சிவபெருமானுக்கு 'பூல் பங்களா' மற்றும் 'சப்பன் போக்' (56 வகையான உணவுப் படைப்புகள்) உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
யமுனை நதிக்கரையில் உள்ள துவாதச ஜோதிர்லிங்கக் கோயிலில் ஏராளமான பக்தர்கள் ருத்ராபிஷேகம் செய்தனர். ருத்ராபிஷேகம் சிவபெருமானை மகிழ்ச்சியடையச் செய்வதோடு, அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியைத் தருவதாக நம்பப்படுகிறது என்று கோயிலின் ஊடகப் பொறுப்பாளர் ராகேஷ் திவாரி கூறினார்.
Thousands of devotees thronged prominent Shiva temples in Varanasi, Mathura, Barabanki and other districts of Uttar Pradesh on Monday, the last Monday of the Hindu month of Sawan, braving heavy rains in some areas.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







