வடமாநில சிவாலயங்களில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த கோயில்கள்...
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வடமாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்துக்களின் புனித மாதமான சாவன் மாதத்தின் கடைசி திங்கள்கிழமையான இன்று.
சிவபெருமானை வணங்குவோர் மங்களகரமான 'சாவன் சோமவார்' விரதக் காலத்தை இந்த திங்கள்கிழமையுடன் நிறைவு செய்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி, மதுரா, பாரபங்கி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள முக்கிய சிவன் கோயில்களில் இன்று காலை முதல் மக்கள் கூடி வருகின்றனர்.
வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
பக்தர்கள் நீராபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.
பக்தர்கள் மலர்களைத் தூவி வரவேற்கப்பட்டதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
சாவன் மாதத்தின் நான்காவது திங்கள்கிழமையை முன்னிட்டு, கோயில் முழுவதும் மலர்கள், ருத்ராட்ச மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மதுராவில், பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் முக்கிய சிவன் கோயில்களுக்கு வெளியே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.