கிறிஸ்துமஸ் தின அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?
உண்ணும்போது யாருக்குக் கேக்கிலிருந்து வெள்ளிக் காசு கிடைக்கிறதோ அவர் கிறிஸ்துமஸ் தினத்தின் அதிர்ஷ்டசாலியாக கருதப்பட்டு அனைத்துப் பரிசுகளும் அவருக்கே வழங்கப்படும்.


கிறுஸ்துமஸ் அன்று கேட்கப்படும் ‘ஜிங்கில் பெல்ஸ் ஜிங்கில் பெல்ஸ் ஜிங்கில் ஆல் தி வே’ எனும் உற்சாகம் கொப்பளிக்கும் பாடலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தை அழகாக்குவது சர்ச்சுகளில் இருந்து எழும் மணியோசை. கிறுஸ்துவர்களின் மிகப் பெரிய கொண்டாட்ட தினமான கிறுஸ்துமஸ் பற்றி சில சுவையான தகவல்களை சில மாதங்கள் முன்னால் இணையத்தில் படிக்க நேரிட்டது. ஃபோல்டரில் சேமித்து வைத்திருந்தால் எந்தத் தளம் என்று தெரியவில்லை. இதை பதிவிட்டவர்களின் அனுமதி அவர் என்றேனும் படிக்கும் போது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் எழுதியவற்றை பகிர்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
கிறிஸ்துமஸ் கேக்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இங்கிலாந்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் ப்ளம் கேக் செய்வார்கள். அப்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் முன்னிலையிலும் கேக் செய்வதற்குரிய் மாவைக் கொட்டி அவர்கள் அனைவரும் சேர்ந்து பிசைவர். தன் பங்காக அக்குடும்பத்தின் தலைவி ரகசியமாக வெள்ளியிலான ஒரு பென்னி நாணயத்தை மாவுடன் கலந்து விடுவார். இறுதியாக உருவாக்கப்பட்ட கேக் ஒரு மறைவிடத்தில் வைக்கப்படும். கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்தக் கேக்கை எடுத்து குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பரிமாறுவர். உண்ணும்போது யாருக்குக் கேக்கிலிருந்து வெள்ளிக் காசு கிடைக்கிறதோ அவர் கிறிஸ்துமஸ் தினத்தின் அதிர்ஷ்டசாலியாக கருதப்பட்டு அனைத்துப் பரிசுகளும் அவருக்கே வழங்கப்படும்.
பாக்ஸிங் தினம்

கிறிஸ்துமஸூக்கு அடுத்த நாள் பாக்ஸிங் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கும் குத்துச் சண்டைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வழக்கம் இது. கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி சர்ச்சுகளில் ஒரு பெட்டி வைத்துவிடுவார்கள். பணம் படைத்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அப்பெட்டிகளில் பணம் போட்டு வருவார்கள். வருடத்துக்கு ஒரு முறை கிறிஸ்துமஸூக்கு அடுத்த நாள் பெட்டியை திறந்து பணம் எண்ணப்படும். அதைக் கொண்டு ஏழைகளுக்கு பொருளாதார உதவிகள் செய்யப்படும்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து கார்டு

15ன் நூற்றாண்டில் மரத்தில் செதுக்குவேலை செய்யும் வல்லுனர்கள் இந்த நாள் கிறிஸ்துமஸ் கார்டுகளைப்போலவே வாசகங்களும் சித்திரங்களும் பொறித்து வந்தார்கள். இதன் பின் 18, 19 நூற்றாண்டில்தான் வாழ்த்துக்கடிதங்கள் வெளியாகின. 1843ம் ஆண்டில் முதன் முதலாக இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் கார்டு வெளியானது. தன் நண்பரான சர் ஹென்றிகோல் என்பவருக்கு ஹார்ஸ்லி என்பவர் கார்டு தயாரித்துக் கொடுத்தார். தடித்த அட்டைக் காகிதத்தில் லித்தோ முறையில் அச்சிடப்பட்ட கார்டு அது. கிறிஸ்துமஸ் இன்பம் நிறைந்த புத்தாண்டு என்று ஒரு குடும்ப விருந்துக் கூட்ட காட்சியின் சித்திரத்தை தாங்கி இருந்தது கார்டு.
கிறிஸ்துமஸ் தாத்தா

ஹாலந்து நாட்டில் புனித நிக்கோலஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா பிஷப் உடையில் குதிரை மீது அமர்ந்து வருவார். பரிசுகள் கொடுப்பார். பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் தாத்தா பாபா நோயல் என்று அழைக்கப்படுகிறார். இவர் வீடுகளில் புகைபோக்கி வழியாக இனிப்புகளையும் பொம்மைகளையும் போட்டுவிட்டுச் செல்வார். கிரீஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் தாத்தா புனித வாலஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இவர் சிவப்பு உடை அணிந்து கிறிஸ்துமஸ் அன்று குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குவார்.
புனித ஜோஸப் தேவாலயம்

கனடா நாட்டின் தலை நகரான ஒட்டாவாவில் மிகப் பிரம்மாண்டமான புனித ஜோஸப் தேவாலயம் உள்ளது. உலகப் புகழ் பெற்ற தேவாலயம் இது. வழிபடவும் பார்த்து மகிழவும் ஆண்டுதோறும் இருபது லட்சத்துக்கு மேல் மக்கள் வருகிறார்கள். இந்த தேவாலயத்தில் 56 மணிகள் உள்ளன. இந்த மணிகளின் நாதம் இனிமையானது. ரோமானிய பாணியில் இத்தேவாலயத்தை எழுப்பியவர் சகோதரர் ஆண்ரே என்பவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...