கேளாத கதை (வ.உ.சி.யின் சிறை போராட்ட வரலாறு)-குருசாமி மயில்வாகனன்; பக்.1000, ரூ.1,500; நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்; தொண்டி-623 409; ✆ 80720 89186.
நூலாசிரியர் குருசாமி மயில்வாகனன் இதற்கு முன்பு வ.உ.சி. குறித்து எழுதிய கப்பலோட்டிய கதை (2021), தோழர் வ.உ.சி (2022), தற்போது கேளாத கதை என்ற பெயரில் வ.உ.சி. யின் சிறை வாழ்க்கை குறித்த ஆய்வுகள் மூலம் தனித்துவம் பெறுகிறது.
12.3.1908 -இல் கைது செய்யப்பட்டு 24.12. 1912 அன்று விடுதலை செய்யப்பட்ட காலம் வரை மொத்தம் 1,449 நாள்கள் வ.உ.சி. சிறையில் இருந்திருக்கிறார். பாளையங்கோட்டை, கோவை, கண்ணனூர் சிறைகளில் நான்கு ஆண்டுகள் கழித்திருக்கிறார். சிறையில் மற்றவர்களின் விடுதலைக்காக குரல் எழுப்புகிறார். அங்கு தனக்கான உரிமைகளுக்காக தினமும் மோதுகிறார். வெளியிலோ அவரது சுதேசி கப்பலை அரசு முடக்குகிறது. குடும்பமே வறுமையில் வாடுகிறது.
இந்நூல் அவரது சுயசரிதை, உளவு போலீஸ் குறிப்புகள், ஆஷ் கொலை வழக்கு அறிக்கை, பத்திரிகைக் குறிப்புகள், திருநெல்வேலி கழகம் ஆகியவை மூலம் தேதி வாரியாக திரட்டிய குறிப்புகளைக் கொண்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நூலின் தலைப்பு வ.உ.சி. குறித்து பாரதி எழுதிய கவிதையில் இருந்து எடுத்ததாகும். இரு பாகங்களாக வெளிவந்துள்ள முதல் பகுதி சிறை வாழ்க்கை (476 பக்கங்கள்); பகுதி 2 (520 பக்கங்கள்) முழுவதும் மேற்கோள்கள், சான்றுகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமான காங்கிரஸ் சரித்திர நூலில் வ.உ.சி. குறித்து ஒரு வரி இல்லை. 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட காந்திஜி தொகுப்பிலும் இவரது பெயர் இல்லை. இச்சூழலில் இந்நூல் சிறந்த ஆவணமாகவே கருதப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று சுற்றுச்சூழல் தினம்! இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை!

திட்டம் 6

வெந்து தணிந்தது வீடு

செயற்கை நுண்ணறிவு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



