இன்றைய மதுரை-125- முனைவர் அ.பிச்சை; பக்.264; ரூ.300; நியூஸ்மென் பப்ளிகேஷன்ஸ், மதுரை-625 020, ✆ 0452-4396667.
ஆலவாய் நகராம் மதுரையம்பதி குறித்து சங்ககாலம் முதல் தற்காலம் வரை எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் இந்த நூல் இதழ்களில், பிற நூல்களில் வெளிவந்த தகவல்களின் தொகுப்பாக உள்ளது. நூலில் 1901-ஆம் ஆண்டு எனத் தொடங்கி, கடந்த 2000-ஆவது ஆண்டில் மேம்பாலம் கட்டியது வரை ஓரிரு பக்க செய்திகளாகவே தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
நான்காம் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா எத்தனை நாள்கள் நடைபெற்றது என்பதுமுதல் மதுரையில் வெளிவந்த பத்திரிகையில் மகாகவி பாரதியாரின் முதல் கவிதை வெளிவந்தது என 'குயிலனாய் நின்னொடு குலவியின் கலவி' எனும் கவிதையையும் குறிப்பிட்டுள்ளது.
மதுரையின் மாங்குளம் கல்வெட்டு முதல் மகாத்மா காந்தியின் வருகை வரையில் அரிய தகவல்கள் மிகச் சுருக்கமாக தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மதுரை 'தூங்கா நகரம்' என்பதுடன், அங்கு கிடைக்கும் தோசை உள்ளிட்ட உணவுகள் மற்றும் காரம், இனிப்பு என மதுரை மண் மணமும் சிறிய சிறிய செய்திகளாகப் பதிவிடப்பட்டுள்ளன.
மதுரை மஹால், விளக்குத்தூண், திலகர் திடல் என பல இடங்களும், பாரம்பரிய கல்வி நிலையங்களும் நூலெங்கும் தகவல் களஞ்சியமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மதுரைக் கல்லூரி குறித்து நூலில் எந்தத் தகவலும் இல்லை என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.
முடிந்தவரை மதுரை குறித்த அனைத்து தகவல்களையும், மக்களால் பேசப்பட்ட மதுரை வீரன், கரிமேடு கருவாயன் போன்றோரின் சரித்திரங்களையும் நூலாசிரியர் தொகுத்தளித்திருப்பது பாராட்டுக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகன் கற்பூரி தாக்கூர்

வரப்பெற்றோம் (20-04-2026)

இந்தியச் சரித்திரத்தின் இமாலயத் தவறுகள்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


