மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெளிக்குள் வெளிகடந்து

இறைவனை அடைய தேர்ந்தெடுக்கும் பாதை எதுவானாலும் அந்தப் பாதைக்கு வெளிச்சம் காட்டுவது 'அன்பு' எனும் அற்புத விளக்குதான். இந்த உண்மையை உணர்த்துவதாக இருக்கிறது கையடக்க ஏடாக வந்திருக்கும் இந்த மெய் விளக்க நூல்.

News image
Updated On :23 மார்ச் 2026, 12:20 pm

வெளிக்குள் வெளிகடந்து - பின்னலூர் மு.விவேகானந்தன், பக். 128; ரூ. 125; இராமலிங்கர் இலக்கிய மன்றம், சென்னை-600 126, ✆ 94441 78460.

அண்டத்திலிருப்பது பிண்டத்தில்; பிண்டத்தில் இருப்பது அண்டத்தில். இதன் சூட்சுமத்தை உணர்ந்துவிட்டால் கர்மா, விதி குறித்த சந்தேகக் கேள்விகள் ஏதுமில்லை. பஞ்சபூதங்களால் ஆனது உலகம். அதேபோல், இந்த உடம்பும் பஞ்சபூதங்களால் ஆனதுதான். அதில் முக்கியமானது ஆகாயம் எனும் வெளி. இதைத்தான் சித்தர்கள் தங்கள் பாடல்கள் மூலம் விளக்கியுள்ளனர்.

கடவுள் யார்? அவரின் இருப்பிடம் எது? அவரின் தோற்றம் மற்றும் தன்மை என்ன என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு உலகம் முழுக்க பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் தமிழ் மெய்யியல் காட்டும் விளக்கம் எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.

மெய்ஞான அறிஞர்கள் திருமூலர், வள்ளலார், தாயுமான சுவாமிகள் இன்னும் பிற சித்தர்கள் காட்டிய பாடல்கள், விளக்கங்களுடன் எளிமையாகப் படைக்கப்பட்டுள்ள நூல் இது.

வள்ளலாரின் தத்துவங்கள் மடை மாற்றம் செய்யப்படுவதைத் தவிர்க்கவே இந்த நூல் படைக்கப்பட்டது என்கிறார் நூலாசிரியர். பரவெளியில் -ஆகாயத்தைக் காட்டி, மனவெளியில்-மன ஆகாயத்தைக் காட்டி, இடையறாது இரங்கி வேண்டினால் இறைவனின் சுகாதீத நிலையைக் காணலாம் என்கிற உச்ச ரகசிய ஞானத்தை வாசிக்க நேரும்போது ஒற்றைப்புள்ளியில் எல்லாம் விளங்குகிறது.

இறைவனை அடைய தேர்ந்தெடுக்கும் பாதை எதுவானாலும் அந்தப் பாதைக்கு வெளிச்சம் காட்டுவது 'அன்பு' எனும் அற்புத விளக்குதான். இந்த உண்மையை உணர்த்துவதாக இருக்கிறது கையடக்க ஏடாக வந்திருக்கும் இந்த மெய் விளக்க நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.