மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆட்டிசம் - ஓர் எளிய அறிமுகம்

ஆட்டிசம் என்பது அதீத மனநோய் என்று சமூகத்தில் நிலைத்திருக்கும் தப்பிதத்தை உடைத்தெறியும் நூல் இது.

News image
Updated On :16 மார்ச் 2026, 12:14 pm

ஆட்டிசம் -ஓர் எளிய அறிமுகம்- சந்திரசேகரன் கிருஷ்ணன்; பக்.208; ரூ.230; சுவாசம் பதிப்பகம், சென்னை- 600 127, ✆ 81480 66645.

ஆட்டிசம் என்பது அதீத மனநோய் என்று சமூகத்தில் நிலைத்திருக்கும் தப்பிதத்தை உடைத்தெறியும் நூல் இது.

பல காலங்களுக்கு முன்பிருந்தே இந்தப் பாதிப்பு உலகெங்கும் வியாபித்து இருந்ததையும், அதைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட படிப்படியான வளர்ச்சிகள் குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறார் நூலாசிரியர். சூழலுக்கு ஏற்றார்போல் நடந்து கொள்ளத் தெரியாத வளர்ச்சி குறைபாடு உடைய குழந்தைகளை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என சித்திரிக்கும் பழக்கம் இன்றளவும் உள்ளது.

அது எத்தகைய மூடத்தனம் என்பது அறிவியல்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் ஆட்டிசம் எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதில் தொடங்கி, அதன் வகைகள், பாதிப்புகள், சிகிச்சைகள், பயிற்சிகள் வரை பலதரப்பட்ட விஷயங்களை எளிய நடையில் வாசகர்களுக்கு கடத்தி இருக்கிறார் நூலாசிரியர்.

ஆட்டிசம் பாதிப்பு ஏன் ஏற்படுகிறது?, அதை எவ்வாறு கையாளலாம்?, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்தும் விரிவாக அலசப் பட்டு இருக்கிறது.

சாதிப்பதற்கு ஆட்டிசம் ஒரு தடையில்லை என்பதை ஆதாரபூர்வமாகவும், அறுதியிட்டும் கூறுகிறது இந்நூல்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அதன் சாராம்சங்களை சுருக்கமாக மீள்வாசிப்புக்கு வழங்கி இருப்பது கூடுதல் சிறப்பு. ஆட்டிசத்தை அறிந்துகொள்ள முற்படும் அனைவருக்கும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரும் நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.