நடந்தாய் வாழி நதி... சிற்பி-90; தொகுப்பு: கிருங்கை சேதுபதி, பக்.312, கபிலன் பதிப்பகம், காரைக்குடி-630 002, ✆ 94423 79558.
கவிஞர் சிற்பியின் 90-ஆவது ஆண்டு விழா மலரை சிரத்தையுடன் தொகுத்திருக்கிறார் தொகுப்பாசிரியர் கிருங்கை சேதுபதி. கவிஞர் சிற்பி என்ற நதியுடன் நடந்தவர்களின் பார்வைகள் பதிவுகளாக 'நடந்தாய் வாழி நதி' செல்கிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட பிரபலங்களின் விமர்சனங்கள், புகழுரைகள் என பல கோணங்களில் சிற்பியின் சிறப்புகள் அத்தியாயங்களாக இடம்பெற்றுள்ளன.
கலாமின் பார்வையில் சிறப்புக்குரியவராக மிளிர்கிறார் சிற்பி. இரண்டு முறை சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பியின் படைப்புகளில் தனக்குப் பிடித்த கவிதையாய் மூடுபனி என்ற கவிதைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'நிறங்கள்' என்ற கவிதையைக் குறிப்பிடுகிறார். நிறங்களின் பெருமிதம் தேசியக்கொடி, நிறங்களின் தேசம் இந்தியா, நிறங்களின் வேதனை இந்தியா, நிறங்களின் தீராத போர் இந்தியா என்ற கவிதை வரிகளை சிலாகித்து பாராட்டியுள்ளார் கலாம்.
தவத்திரு குன்றக்குடிபொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட ஆதீனங்கள், அருட்செல்வர் நா. மகாலிங்கம், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி என பல பிரபலங்களின் வாழ்த்துரைகளும் சிற்பியின் புகழுக்கு சிகரமாய் உள்ளது.
மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணின் வாழ்த்துரையில், தூத்துக்குடியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த திரையரங்கு கொட்டகை தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதில் ஓர் இளம்பெண் ஆடையில் தீப் பிடித்து, ஆடையைக் களைந்து வெளியே ஓடி வந்தபோது, அங்கு ஆண்கள் குவிந்திருந்ததைப் பார்த்து மீண்டும் நெருப்புக்குள் விழுந்து உயிரைவிட்ட கொடிய நிகழ்வை சிற்பி தனது கவிதையில் 'கோடம்பாக்கம் நடிகையின் நடிப்பைக் காண வந்த நங்கையே, நீ நாணத்தால் மீண்டும் தீக்குளித்தாயே' என்று எழுதிய வரிகளை தன்னால் மறக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கவிதைப் பிடிப்பு உள்ளவர்களால் படிக்கப்பட வேண்டிய தொகுப்பு இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு






