வெறுப்பு அரசியல்- கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது; பக். 116; ரூ. 120; இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை-600 012, ✆ 044- 2662 4401.
உலக அளவில் மதம், அரசியல்ரீதியான வெறுப்புப் பரப்புரைகளால் நன்மைகள் கிடைக்கவில்லை. நாடு வளர்ச்சிப் பாதையில் பயணித்ததா?, வறுமையோ ஊழலோ அகன்றதா?, பொருளாதாரம் மேம்பட்டதா?, வேலைவாய்ப்புகள் பெருகியதா?, வெளிநாட்டு முதலீடுகள் பெருகியதா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பும் நூலாசிரியர், 'இந்த வகை பரப்புரைகளால் சமூகத்தில் சிலரை கொழுக்க உதவியதே தவிர வேறொன்றும் இல்லை. வெறுப்பு மறைய, பாசம் மலர வேண்டும்' என்கிறார்.
வெறுப்பை விதைத்தால் கிடைப்பது என்ன?, உலகிலும், இந்தியாவிலும் வெறுப்பு அலைகள் உருவான விதம், வரலாற்றில் திரிக்கப்பட்ட உண்மைகள், வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டனவா?, நாட்டின் வளர்ச்சியில் முஸ்லிம் ஆட்சியாளர்களின் பங்கு, நாட்டுப் பிரிவினை, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஆதாரங்களுடனும், தலைவர்களின் விளக்கங்களுடன் தரவுகளை நூலாசிரியர் அளிக்கிறார். கோயில்களைப் பாதுகாத்த முஸ்லிம் மன்னர்கள், கோயில்
களுக்கு ஒளரங்கசீப் அளித்த மானியமும் கொடைகளும், அவை சேதப்படுத்தப்பட்டதற்கான உண்மைக் காரணங்களையும் நூலாசிரியர் வரலாற்று ஆதாரங்களுடன் உரிய விளக்கங்களை அளிக்கிறார்.
இஸ்ரேல் பிரச்னை, யூதர்கள் மீதான வெறுப்பு, யூதம்- கிறித்தவம்- முஸ்லிம் மதங்களுக்கு இடையேயான ஒற்றுமை- வேற்றுமைகளும் நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன.
முஸ்லிம் மதத்தை வெறுப்பது ஏன் என்ற கேள்விகளுக்கு உரிய விளக்கங்களைக் குறிப்பிடும் நூலாசிரியர் நிறம், இனம், ஜாதி, குடியேறியவர்கள் மீதான வெறுப்புகளுக்கான காரணங்களையும் குறிப்பிடுகிறார்.
வேற்றுமைகள் இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என்று ஆவலை உணர்த்தும் விதமாக நூலாசிரியரின் இந்த நூல் பல வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டார்வின் (வாழ்வும் அறிவியலும்)

சிவகங்கையில் வரலாற்று நூல் வெளியீடு

செவ்வியலும் நாட்டுப்புறவியலும்

தொழில் செ(ய்)ய விரும்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


