என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்? துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை
/

தெய்வத் தமிழ்-பன்னாட்டு ஆய்வு மாநாட்டுக் கட்டுரைகள்-இரு தொகுதிகள்

ஆன்மிக மரபிலும் தமிழ் மொழியிலும் ஈடுபாடு கொண்ட ஆர்வலர்களுக்கு அரிய விருந்தாக அமைந்துள்ளன இவ்விரு தொகுதிகளும்.

News image
Updated On :29 ஜூன் 2026, 7:27 pm IST

தெய்வத் தமிழ்-பன்னாட்டு ஆய்வு மாநாட்டுக் கட்டுரைகள்-இரு தொகுதிகள்-பக்.1,296; ரூ.1,200; சங்கரா பதிப்பகம், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏனாத்தூர், காஞ்சிபுரம் 631561; ✆ 044-2764066.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாணையின் வண்ணம் ஸ்ரீ சங்கரா கல்லூரியில் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடங்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற தெய்வத் தமிழ் பன்னாட்டு மாநாட்டில் தமிழறிஞர்கள் அளித்த ஆய்வுக் கட்டுரைகளும் மேலும் சில அயலக அறிஞர்களின் கட்டுரைகளும் சேர்த்து இரு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பரிபாடலில் திருமால், சங்கப் புலவர் மரபில் வைணவம், செந்தமிழ் இலக்கியத்தில் ஹிந்துக் கடவுள்களின் ஊர்திகளும் கொடிகளும் போன்ற ஆய்வுக் கட்டுரைகள் தகவல் களஞ்சியங்களாக உள்ளன. அதுமட்டுமல்லாது, தமிழையும் ஆன்மிகத்தையும் போற்றி வந்துள்ளவர்களின் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளும் அடங்கியுள்ளன.

அந்த வகையில், சைவ சமயக் குரவர், ஆழ்வார்கள், பட்டினத்தார், வள்ளலார், சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்றோரின் ஆன்மிக வாழ்வு புதிய கண்ணோட்டத்தில் நமக்குக் காணக் கிடைக்கிறது.

அவை மட்டுமன்றி, தமிழிலக்கியங்களில் பெண் தெய்வ வழிபாடு, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் தாலாட்டு, சம்பந்தரின் சமூகச் சிந்தனை, திருமங்கையாழ்வார் சித்திரிக்கும் திருவல்லிக்கேணி, எண்கணிதமும் திருச்சந்த விருத்தமும், பாபநாசம் சிவன் கீர்த்தனைகளில் வழிபாட்டு முறைகள், திருப்புகழில் ராமாயணச் செய்திகள் போன்ற மாறுபட்ட பொருள்களிலும் ஆய்வுக்கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

இதில் மொத்தம் 180 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆன்மிக மரபிலும் தமிழ் மொழியிலும் ஈடுபாடு கொண்ட ஆர்வலர்களுக்கு அரிய விருந்தாக அமைந்துள்ளன இவ்விரு தொகுதிகளும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.