சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மணிக்கொடி

மணிக்கொடி - ஜோதிர்லதா கிரிஜா; பக்.752; ரூ.500; சேது அலமி பிரசுரம், ஜி-7, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராயநகர், சென்னை-17.

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:10 am

ஜோதிர்லதா கிரிஜா

மணிக்கொடி - ஜோதிர்லதா கிரிஜா; பக்.752; ரூ.500; சேது அலமி பிரசுரம், ஜி-7, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராயநகர், சென்னை-17.

கல்கியின் பொன்விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். "நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள்; நாடு தழுவிய மாபெரும் பிரச்னைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக்காட்டவும் இந்த புதினம் எழுதப்பட்டது' என்கிறார் நூலாசிரியர். கங்கா, பவித்ரா பாத்திரங்கள் நாவலைப் படித்து முடித்த பின்னும் நீண்டகாலம் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும். வாஞ்சி அய்யர் இறந்த போது அவர் மனைவி கருவுற்றிருந்தார், ராஜ்காட் என்பது பன்னெடுங்காலமாக யமுனை ஆற்றின் கரையில் இருந்துவரும் வரலாற்று புகழ்வாய்ந்த அரச பரம்பையினரின் இடுகாடு. காந்தியடிகளுக்கு இங்கேதான் எரியூட்டப்பட்டு அது மேலும் புகழ்பெற்றது என்பன போன்ற வரலாற்றுத் தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. வரலாற்று நிகழ்வுகளை உரையாடல்கள் மூலமும் அது சாத்தியப்படாத இடங்களில் பாடப்புத்தகப் பாணியிலும் நூலாசிரியர் விவரித்துள்ளார். இது சற்று அலுப்பைத் தந்தாலும், வரலாற்றுப் பின்புலம் கொண்ட நீண்ட நாவலில் இதைத் தவிர்க்க முடியாதுதான். விடுதலைக்காக நம் முன்னோர்கள் பட்ட வடுக்களின் வலியை உணர்வதற்கும், அவர்களின் சீரிய நெறிமாறா வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளவும் இந்தப் புதினம் இன்றைய தலைமுறைக்கு ஓர் ஆவணமாய்த் திகழும் என்பது மிகையல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.