டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

பாகிஸ்தானிடமிருந்து சோமாலியா போர் விமானங்கள் கொள்முதல்

News image
போர் விமானங்கள்- கோப்புப்படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 3:16 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஆப்பிரிக்க நாடான சோமாலியா பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சோமாலிய விமானப்படைத் தலைமைத் தளபதி முகமது ஷேக் அலி பிப்ரவரி தொடக்கத்தில் பகிஸ்தானுக்குச் சென்றிருந்தார். அப்போது சோமாலியாவுக்கு பாகிஸ்தானின் ஜே. எஃப். - 17 தண்டர் ப்ளாக்-3 போர் விமானங்கள் கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சோமாலியாவுக்கு 24 போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பாகப் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்டியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்படும் இலகு ரக போர் விமானமான ஜே. எஃப். - 17 தண்டர், கடந்தாண்டு இந்தியாவுக்கு எதிரான ஆபரேசன் சிந்தூர் சண்டையில் திறம்படச் செயல்பட்டதாக பாகிஸ்தான் சுட்டிக்காட்டியிருந்தது. எனினும், அவற்றின் திறன் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், இந்தப் போர் விமானங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக, பாகிஸ்தானுடனான சோமாலியாவின் 90 கோடி டாலர் ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோமாலியாவில் தொடா் வறட்சி மற்றும் அதிகரித்து வரும் மோதல்களால் சுமாா் 44 லட்சம் மக்கள் உணவின்றித் தவிக்கின்றனா். இதில் சுமாா் 10 லட்சம் மக்கள் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி உயிா் பிழைக்கப் போராடி வருவதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் அமைப்பு எச்சரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.