ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சாலப்பரிந்து

சாலப்பரிந்து; நாஞ்சில் நாடன்; பக்.240; ரூ.190; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் -1; 04652-278525.

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:09 am

நாஞ்சில் நாடன்

சாலப்பரிந்து; நாஞ்சில் நாடன்; பக்.240; ரூ.190; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் -1; 04652-278525.

தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்று பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையிலுமே அந்தக் கதை நடக்கும் சூழல் குறித்த ஏராளமான தகவல்களை அளிக்கிறார் நூலாசிரியர். சிறுகதைக்கு இவ்வளவு தகவல்கள் தேவையா? என்ற எண்ண அலை நமக்குள் எழும்போதே, "அரிசியில் எத்தனை வகைகள் பழங்காலத்தில் நம்மிடம் வழக்கில் இருந்தன. மீன் வளங்கள் எவ்வளவு இருந்தன...' என்பனவெல்லாம் வெறும் தகவல்கள் என்னும் நிலையைக் கடந்து ஆவணங்களாக விரிகின்றதே என்னும் எண்ணம் எழுகிறது! கதைகளைப் படிக்கும் போது அதிர்ச்சி, நெகிழ்ச்சி, கழிவிரக்கம், நகைச்சுவை, சோகம், துணிச்சல், ஆற்றாமை இப்படி பலவித உணர்ச்சிகளின் தொகுப்பாய் நாம் ஆகிப் போவதைத் தவிர்க்க முடியவில்லை. கும்பமுனியைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு வடிக்கப்பட்டிருக்கும் கதைகளில் "வங்கணத்தின் நன்று வலிய பகை' கதை, மஞ்சள் எழுத்தை ஊக்குவிக்கும் பதிப்பாளர்களுக்கு சரியான சாட்டையடி! நுனிப்புல்லாக மேயாமல் ஆழமாகப் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.