கம்பன் காட்டும் கண்ணுதலான் - பள்ளத்தூர் பழ.பழனியப்பன்; பக்.296; ரூ.130; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-24342810 / 24310769.
கண்ணுதலான் (நெற்றிக்கண் உடையவன்) என்று சிறப்பிக்கப்படும் சிவபெருமானைப் பற்றி கம்பர் தன் காவியத்தில் எங்கெல்லாம் பாடிப் பரவியுள்ளார் என்பதை விளக்கும் நூல். "கம்பனும் சிவனும்' எனும் தலைப்பில் தமிழறிஞர் இராய.சொக்கலிங்கம் தொகுத்து, 1950-இல் வெளிவந்த நூலின் தொகுப்பில் 395 பாடல்களை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்நூலாசிரியர், 83 பாடல்களைக் கூடுதலாகத் தேடிப்பிடித்து தொகுத்தது மட்டுமல்லாமல், மிகைப் பாடல்களைத் தவிர்த்து மற்ற பாடல்களுக்கு நுட்பமான, எளிய உரையும் எழுதியுள்ள இவர், கம்பராமாயணம் 10500 பாடல்களுக்கும் தனியொருவராக இருந்து, விளக்கவுரையும், நயவுரையும் எழுதியுள்ளார் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
ஊழி முதல்வனாகிய சிவபெருமானுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உமை கேள்வன், ஈசன், பரமன், கறைமிடற்று இறை, மதிவளர் சடைமுடி, மழுவாளன், சுடுஅமர்களன், புராரி, வாரணத்து உரிவையான், உருத்திரன், செங்கண் ஏற்றவன், அழல்தரும் கடவுள், இருள்தரு மிடற்றினேன், கங்கை சூடும் ஈசன் - என சிவபெருமானின் பல பெயர்களைக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.
÷இந்நூலின் தனிச்சிறப்பு, சிவபெருமானைப் பற்றி 478 பாடல்களில் கம்பர் கூறியிருப்பதையும், அந்தக் கூற்றுகள் யாருடைய வாய்மொழி என்பதையும், அக்கூற்றுகளுக்குள் பொருந்தியிருக்கும் பொருள் என்ன? என்பன போன்றவற்றையும் விளக்குவதுதான். இந்நூல் மூலம் "கம்பர் ஒரு சமரசஞானி' என்பதைப் படிப்போர் மனதில் ஆழமாகப் பதித்துவிடுகிறார் நூலாசிரியர். இந்நூலை கம்பன் அன்பர்களும், கம்பன் கழகங்களும் மட்டும் கொண்டாடினால் போதாது. பள்ளி-கல்லூரிகளிலும், நூலகங்களிலும் கொண்டாட வேண்டும். தமிழ் பக்தி இலக்கியத் துறைக்கும், திறனாய்வுத் துறைக்கும் மிகவும் பயன்படும் வகையில் வெளிவந்திருக்கும் இந்நூல், கம்பர் கம்பராமாயணத்தில் ராமன் புகழை மட்டும் பாடவில்லை என்பதை நன்கு உணர்த்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


