சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நீலவன்

நீலவன் - சா.கந்தசாமி; பக்.176; ரூ.100; சிந்தியன் பதிப்பகம், சென்னை-35; )044 -2434 3806. நடுத்தர மக்கள் அதிகமாக வாழும் புறநகர்ப் பகுதியான தென்றல் நகரில் நீலவன் என்ற மாய உருவம் வருவதால் ஏற்படும் நிகழ்வு

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:08 am

சா.கந்தசாமி

நீலவன் - சா.கந்தசாமி; பக்.176; ரூ.100; சிந்தியன் பதிப்பகம், சென்னை-35; )044 -2434 3806.

நடுத்தர மக்கள் அதிகமாக வாழும் புறநகர்ப் பகுதியான தென்றல் நகரில் நீலவன் என்ற மாய உருவம் வருவதால் ஏற்படும் நிகழ்வுகளை மிகச் சுவையாகச் சொல்லும் நாவல். துப்பறியும் நாவலுக்கேயுரிய பரபரப்பு இருந்தாலும், நடுத்தர வர்க்க மனிதர்களின் மனோபாவம் இந்நாவலில் மிகவும் அற்புதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அதிகாரிகள், அரசியல் செல்வாக்குமிக்கவர்கள், வீடுவீடாகப் பால் பாக்கெட் போடுபவர், நடிகை என பலதரப்பட்ட மனிதர்கள் இந்த நாவலில் உயிரோடு வாழ்ந்திருக்கிறார்கள். யார் அந்த நீலவன் என்றறியும் ஆர்வம் நூலைப் படித்து முடித்த பின்பும் இருக்கிறது. நீலவன் நல்லவர்களுக்கு நல்லவனாகவும், கெட்டவர்களுக்கு கெட்டவனாகவும் இருப்பதும், அவனைப் பார்த்து பலர் பயந்தாலும், சிலர் விரும்புவதும் இன்றைய சமூக வாழ்வின் சாரம்சத்தை நமக்குச் சொல்வதாக இருக்கிறது. பல குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தமிழுலகுக்கு அளித்திருக்கும் நூலாசிரியரின் இன்னொரு பங்களிப்பு இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.