/

அறிவியல் வரலாறு

அறிவியல் வரலாறு - பாகம்-1; நெல்லை சு. முத்து; பக்.529; ரூ.200; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; )044-24342810. இந்நூலாசிரியர், தமிழ்நாட்டில் பலராலும் அறியப்பட்ட அறிவியல் கட்டுரையாளர். அவர் எழுதிய 8

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:08 am

நெல்லை சு. முத்து

அறிவியல் வரலாறு - பாகம்-1; நெல்லை சு. முத்து; பக்.529; ரூ.200; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; )044-24342810.

இந்நூலாசிரியர், தமிழ்நாட்டில் பலராலும் அறியப்பட்ட அறிவியல் கட்டுரையாளர். அவர் எழுதிய 80 அறிவியல் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். பல்வேறு அறிவியல் தகவல்களைத் தமிழில் எளிமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்பதோடு, "மானுடம் வென்றதம்மா' என்ற கம்பனின் சொல்லாழத்தை இந்த அறிவியல் உண்மைகளில் உணர முடிகிறது. இந்தியத் தொன்மை, மரபு ஆகியவற்றின் பின்புலத்தையும் இந்நூலிலுள்ள கட்டுரைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந்நூல் மாணவர்களுக்காக வெளியிடப்படுவதாக பதிப்பகத்தார் கூறினாலும், இதைப் படிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்தான். அவர்கள் இதைப்பற்றி பேசுவதன் மூலம், மாணவர்கள் மேலும் இந்நூலைத் தேடச் செய்வதுதான் அறிவின் வளர்ச்சியாக இருக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.