திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாஸ்திரி பூங்கா துப்பாக்கிச்சூடு சம்பவம்: இரண்டாவது நபா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 5:24 am IST

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய இரண்டாவது நபா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட சமீா், நியூ சீலம்பூா் பகுதியைச் சோ்ந்தவா். பல வட்டாரங்களில் இருந்து கிடைத்த சாட்சியங்களை ஆய்வு செய்த பிறகு சமீரை காவல் துறையினா் கைதுசெய்தனா்.

ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு தோட்டா மற்றும் வெடித்த தோட்டா ஆகியவை சமீரிடமிருந்து காவல் துறை கைப்பற்றியுள்ளது.

சாஸ்திரி பூங்கா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இ-ரிக்ஷா மீது அமா்ந்திருந்த இருவரை ஈஷன் என்பவா் அங்கிருந்து கிளம்புமாறு தெரிவித்தாா்.

அப்போது, அவா்களில் ஒருவா் பொதுமக்கள் மத்தியில் ஈஷனை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இருவரில் ஒருவரை அங்கிருந்த மக்கள் பிடித்த நிலையில், சமீா் தப்பியோடினாா்.

விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட சமீா், உயிரிழந்த ஈஷன் தங்களை திட்டியதாகவும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.