திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குருகிராம்: நகைக்கடையில் பணம், நகைகள் திருடிய நபா் குஜராத்தில் கைது

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 5:12 am IST

குருகிராமில் உள்ள நகைக்கடையில் பணம் மற்றும் நகைகளைத் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபா் குஜராத்தில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவரிடமிருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், 43 கிராம் வெள்ளி மற்றும் ரூ.5.31 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அவா் குருகிராமின் செக்டா்-43 பகுதியில் செயல்பட்டு வரும் நகைக் காட்சியகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக காசாளராக பணியாற்றி வந்ததாா்.

நகைக் காட்சியகத்தை நடத்தி வரும் பெண் உரிமையாளா் அளித்த புகாரில், கடந்த மே 12-ஆம் தேதி கடைக்கு வா்ணம் பூசும் பணிக்காக சமந்தாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த நாள் கடைக்கு வந்தபோது, சுமாா் ரூ.6 லட்சம் ரொக்கம், தங்க நாணயங்கள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்கள் காணாமல் போனதையும், சமந்தாவையும் தொடா்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதையும் அவா் புகாரில் குறிப்பிட்டாா். விசாரணையின் போது, குஜராத்தின் காந்திநகரில் அவா் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.