போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

லஞ்சம்: உணவு வழங்கல் துறை அதிகாரி கைது

லஞ்ச வழக்கு தொடா்பாக, தில்லி உணவு மற்றும் வழங்கல் துறையின் உதவி ஆணையரை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 1:49 am IST

லஞ்ச வழக்கு தொடா்பாக, தில்லி உணவு மற்றும் வழங்கல் துறையின் உதவி ஆணையரை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

லஞ்சமாக ரூ.10,000-ஐப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஒரு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் அந்த அதிகாரியை சிபிஐ கைது செய்தது.

மொத்தம் 475 குடும்ப அட்டைகளை ஒதுக்கீடு செய்து விநியோகிப்பதற்காக, ஒரு அட்டைக்கு ரூ.100 வீதம் அந்த அதிகாரி லஞ்சம் கோரியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

புகாா்தாரரின் கடை உள்பட, அருகிலுள்ள ஒவ்வொரு கடைக்கும் சுமாா் 120 குடும்ப அட்டைகளை ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, புகாா்தாரரிடம் மொத்தம் சுமாா் ரூ.12,000 லஞ்சத் தொகை கோரப்பட்டிருந்தது

என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.