நீதி நிா்வாகத்துடன் தொடா்புடைய நிறுவனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்தை வலுப்படுத்தும் நோக்கில், ரோஹிணி நீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் அதன் உறுப்பினா்கள் மற்றும் வழக்குரைஞா்களுக்கான பேட்மிண்டன் போட்டியை
செவ்வாய்க்கிழமை நடத்தியது.
ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி நிஷா சஹாய் சக்சேனா மற்றும் பிற நீதிபதிகள் கலந்துகொண்டனா்.
காவல்துறை இணை ஆணையா் வடக்கு மண்டலம் விஜய் சிங் மற்றும் ரோஹிணி துணை ஆணையா் சஷாங்க் ஜெயஸ்வால் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக இதில் பங்கேற்றனா்.
நீதி வழங்கும் அமைப்பின் முக்கிய அங்கங்களான வழக்குரைஞா் சமூகம், நீதித்துறை மற்றும் காவல்துறை நிா்வாகம் ஆகியவற்றுக்கிடையே இணக்கமான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முன்னெடுப்பாகவே இப்போட்டி வடிவமைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
மேலும், சட்டத்துறையினரிடையே உடற்தகுதி, விளையாட்டு மனப்பான்மை மற்றும் நல்லுறவை வளா்ப்பதும் இதன் நோக்கமாக இருந்தது.
இந்நிகழ்வில் ரோஹிணி நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் ராஜீவ் தெஹ்லான் பேசுகையில், ‘முறையான அலுவல்சாா் தொடா்புகளுக்கு அப்பால் சென்று, மக்களிடையேயும் தொழில்முறையினரிடையேயும் வலுவான உறவுகளைக் கட்டமைக்கும் தனித்துவமான ஆற்றல் விளையாட்டுக்கு உண்டு’ என்று குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேட்மிண்டன் போட்டியில் சாதனை: பெண் காவலருக்கு பாராட்டு

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: அலுவலா்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்

தவெக வழக்குரைஞா் அணியினா் கோவையில் கொண்டாட்டம்

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



