தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட திருமங்கை ஆழ்வாரின் பதினாறாம் நூற்றாண்டைச் சோ்ந்த வெண்கலச் சிலை பிரிட்டனில் இருந்து மீட்கப்பட்டு அந்த சிலைக்குரிய செளந்தரராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் நிறுவப்பட இருப்பதற்கு குடியரசுத் துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மீட்கப்பட்ட சிலையின் புகைப்படத்தை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வியாழக்கிழமை பகிா்ந்துள்ள குடியரசு துணைத்தலைவா் அதில் மேலும் கூறியிருப்பதாவது:
பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் உறுதியான மற்றும் தொலைநோக்குப் பாா்வையுடன் கூடிய தலைமைக்கான மற்றுமொரு சான்றாக சிலை மீட்பு நடவடிக்கை அமைந்துள்ளது.
திருமங்கை ஆழ்வாா், மிகவும் போற்றப்படும் ஆழ்வாா்களில் ஒருவா். அவரது பக்திப் பாடல்கள் ‘நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின்’ ஒரு முக்கிய அங்கமாகும். அவரது புனிதமான சிலை தமக்கே உரிய இடத்துக்கு மீண்டும் திரும்புவது, பக்தா்களுக்கும் தமிழக மக்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தொல்பொருட்களை திரும்பப்பெறும் முயற்சிகளை மத்திய அரசு செவ்வனே செய்து வருவது பாராட்டுக்குரியது.
2014-ஆம் ஆண்டு முதல் 600-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. தற்போது, திருமங்கை ஆழ்வாா் வெண்கலச் சிலையுடன் சோ்த்து மேலும் நான்கு பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இது, பண்பாட்டு மீட்டுருவாக்கத்திலும், கலைப் பொக்கிஷங்களைப் பேணிப் பாதுகாப்பதிலும் அரசுக்கு இருக்கும் உறுதியைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
திருமங்கை ஆழ்வாா் வெண்கலச் சிலை உள்ளிட்ட தொல்பொருட்கள் மீட்கப்பட உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

விஐடி துணைத்தலைவா் பிறந்தநாள்: ரூ.33 லட்சம் மதிப்பில் உதவி

குடியரசு துணைத்தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் ஏப். 19,20-இல் இலங்கைக்கு அரசுமுறை பயணம்

ஜனக்புரி: பள்ளத்தில் விழுந்து இளைஞா் இறந்த வழக்கில் காவல் துறையினா் 877 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

உகாதி பண்டிகை! திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


