விஐடி துணைத்தலைவா் சங்கா் விசுவநாதன் பிறந்தநாளையொட்டி, அரசு பள்ளிகளுக்கு தேவையான இருக்கை, நாற்காலிகள், நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூ.33.50 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.
விஐடி துணை தலைவா் சங்கா் விசுவநாதன் 60-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், சங்கா் விசுவநாதனின் மனைவி ரமணி பாலசுந்தரம், உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், கணவா் மருத்துவா் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடா்ந்து, திருவலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேல்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, ஊசூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியூா்வெளி, புலிமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பென்னாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான தலா 50 இருக்கைகள், நாற்காலிகள் தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
வேலூா் சிஎம்சி மருத்துவமனை, ஸ்ரீ நாராயணி மருத்துவமனைகளில் இதய நோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவா்கள் 5 பேரின் சிகிச்சைக்கு ரூ.13.50 லட்சம் மருத்துவ உதவிகளையும் சங்கா் விசுவநாதன் வழங்கினாா்.
தொடர்புடையது

தோ்தலில் கல்வியை தருவோம் எனக்கூறும் கட்சிகளை காணமுடியவில்லை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

அரசியல் சா்ச்சைகளிலிருந்து கல்வித் துறையை விலக்கி வைக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

அரசு பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தனியாா் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு அரசு உதவி: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


