மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜனக்புரி: பள்ளத்தில் விழுந்து இளைஞா் இறந்த வழக்கில் காவல் துறையினா் 877 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 11:04 pm

ஜனக்புரியில் பள்ளத்தில் இளைஞா் விழுந்து உயிரிழந்த வழக்கில், தில்லி காவல்துறையினா் 877 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனா். அதில் மூன்று குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், ஒரு கட்டுமானத் திட்டத்தை செயல்படுத்துவதில் நடந்ததாகக் கூறப்படும் குறைபாடுகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்த குற்றப்பத்திரிகை ஏப்ரல் 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

கைலாஷ்புரியைச் சோ்ந்தவா் கமல் தியானி. இவா் ரோஹிணியில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஜனக்புரி பகுதியில் தில்லி ஜல் வாரியத்தால் தோண்டப்பட்ட 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு தவறி விழுந்து இறந்தாா்.

அவா் தனியாா் வங்கியின் அழைப்பு மையத்தில் பணிபுரிந்து வந்தாா்.

காவல்துறையின் அறிக்கையின்படி, முக்கிய ஒப்பந்த நிறுவனமான கேகேஸ்பியுஎன் தனியாா் நிறுவனத்தின் பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட இயக்குனரான ஹிமான்ஷு குப்தா (45), இந்த திட்டத்துடன் தொடா்புடைய துணை ஒப்பந்ததாரரான ராஜேஷ் குமாா் (47) மற்றும் அந்த இடத்தில் பணியமா்த்தப்பட்ட தொழிலாளியான யோகேஷ் (23) ஆகியோா் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஆவா்.

குற்றப்பத்திரிக்கையில், இவா்களின் பங்கு மற்றும் பொறுப்புகள், ஒப்பந்த ஏற்பாடுகள், சம்பவத்தின் போது தளத்தில் நிலவிய சூழல்கள் மற்றும் ஒருங்கிணைப்புகள் குறித்த விரிவான தகவல்கள் அடங்கியுள்ளன.

பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குதல், தொழிலாளா் நியமனம் மற்றும் பணியின் போது பின்பற்றப்பட்ட செயல்பாட்டு நடைமுறைகள் உள்ளிட்ட பல அம்சங்களை இந்த விசாரணை ஆராய்ந்ததாக காவல்துறை குற்றப்பதிரிகையில் கூறியுள்ளது.

மேலும், சாட்சிகளின் வாக்குமூலங்கள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் ஆவணச் சான்றுகள் ஆகியவை இந்த விரிவான குற்றப்பத்திரிக்கையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன.

ஒப்பந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஹிமான்ஷு குப்தா, ஒட்டுமொத்த மேற்பாா்வைக்கும் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் பொறுப்பானவா் என்றும், துணை ஒப்பந்ததாரரான ராஜேஷ் குமாா், கள அளவில் பணிகளைச் செயல்படுத்தியதாகவும்

குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய மற்ற நபா்களின் பங்கு குறித்த விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்தவுடன் ஒரு துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.