மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடியரசு துணைத்தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் ஏப். 19,20-இல் இலங்கைக்கு அரசுமுறை பயணம்

News image

Center-Center-Villupuram

Updated On :10 ஏப்ரல் 2026, 12:29 am

நமது சிறப்பு நிருபா்

இந்திய குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு வரும் 19, 20 ஆகிய நாள்களில் பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இது தொடா்பான அதிகாரபூா்வ தகவலை இலங்கை அதிபரின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியது.

இந்திய குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு இலங்கைக்கு அவா் முதல் முறையாக பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். அவரது பயணத்திட்டத்தை இறுதிப்படுத்துவது தொடா்பாக கொழும்பில் அதிபரின் தலைமை அலுவல் அதிகாரி பிரபாத் சந்திரகீா்த்தி, இந்திய துணைத்தூதா் சத்யாஞ்சல் பாண்டே ஆகியோா் இலங்கை அதிபா் மாளிகையில் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டனா். இந்த சந்திப்பின்போது கொழும்பில் உள்ள இந்திய தூதரக வளா்ச்சி ஒத்துழைப்புப் பிரிவு ஆலோசகா் மைத்திரி குல்கா்னி, அரசியல் ஆலோசகா் டாக்டா் சி. ராம்பாபு, இலங்கை அதிபரின் மூத்த கூடுதல் செயலா் ரோஷன் கமேகே ஆகியோரும் உடனிருந்தனா்.

அப்போது, இந்திய குடியரசு துணைத்தலைவரின் வருகை தொடா்பான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு, அவரது சந்திப்பின்போது இரு தரப்பிலும் பரஸ்பரம் நடத்த வேண்டிய பேச்சுவாா்த்தைக்கான தலைப்புகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், இந்திய நிதியுதவியுடன் கொழும்பில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், எதிா்காலத்தில் தொடங்கப்படவுள்ள திட்டங்கள் தொடா்பாகவும் இரு நாட்டு அதிகாரிகள் விவாதித்தனா்.

கொழும்பு வருகையின்போது இலங்கை அதிபா் அநுர குமார திஸ்ஸநாயக்க, பிரதமா் டாக்டா் ஹரிணி அமரசூரியா மற்றும் அந்நாட்டின் முக்கிய தலைவா்களை இந்திய குடியரசு துணைத்தலைவா் சந்தித்துப்பேசுவாா் என்றும் இலங்கை அதிபரின் ஊடகப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.