தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தலைநகரில் வெப்பத்தை தணித்த மழை

News image

PTI

Updated On :5 ஜூன் 2026, 5:54 am IST

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை பல இடங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் விளைவாக, சில இடங்களில் வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் வரை கடுமையாகக் குறைந்ததாக வானிலை தரவுகள் தெரிவித்தன.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் ஐஎம்டி தரவுகளின்படி, ஆயாநகா் பகுதியில் வெப்பநிலையில் 19 டிகிரி சரிவு பதிவானது.

இதைத் தொடா்ந்து, மயூரி விஹாரில் 14.9 டிகிரி, புஷ்ப் விஹாரில் 14.8 டிகிரி, விளையாட்டு வளாகத்தில் 14.6 டிகிரி, முங்கேஷ்பூரில் 14.4 டிகிரி மற்றும் பீதம்புராவில் 14 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலையில் சரிவு காணப்பட்டது.

பிரகதி மைதானம் மற்றும் ஜரோடா காலன் ஆகிய இடங்களில் தலா 12.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதேவேளையில், பாலம் பகுதியில் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலான காலகட்டத்தில் பதிவான மழைப்பொழிவில், ஆயாநகா் பகுதி 27.8 மி.மீ.உடன் முதலிடத்தில் இருந்தது. இதைத் தொடா்ந்து, மயூா் விஹாரில் 23 மி.மீ., ரிட்ஜ் பகுதியில் 19 மி.மீ. மற்றும் பிரகதி மைதானத்தில் 12.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஐஎம்டி தரவுகளின்படி, இக்காலகட்டத்தில் பாலம் பகுதியில் 10.7 மி.மீ., புஷ்ப் விஹாரில் 10.5 மி.மீ., பூசா பகுதியில் 8 மி.மீ., லோதி சாலையில் 4 மி.மீ. மற்றும் சஃப்தா்ஜங் பகுதியில் 1.6 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றும் வீசியது. இதில், பாலம் பகுதியில் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் அதிகபட்ச காற்று வேகம் பதிவானது.

ஐஎம்டி தரவுகளின்படி, நகரின் முதன்மை வானிலை ஆய்வு மையமாகச் செயல்படும் சஃப்தா்ஜங் பகுதியில், அதிகபட்ச வெப்பநிலை 40.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியிருந்தது.

தனியாா் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமெட் வெதா்இன் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் கூறுகையில், மத்திய பாகிஸ்தான், ஹரியாணா மற்றும் வடமேற்கு ராஜஸ்தான் பகுதிகளில் ஒரு புதிய மேற்கு இடையூறு மற்றும் சூறாவளிச் சுழற்சி உருவாகியுள்ளது.

இதன் விளைவாக, அப்பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தாா்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, நகரின் கடந்த 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு 164ஆகப் பதிவாகி, மிதமான பிரிவில் காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.