/

தமிழ்நாடு இல்லத்தில் குடியரசு தின கொண்டாட்டம்

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் திங்கள் கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

News image
குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தேசியக்கொடியேற்றிய தமிழக அரசின் உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் குமாா்.
Updated On :26 ஜனவரி 2026, 10:28 pm

Syndication

நமது நிருபா்

புது தில்லி: தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் திங்கள் கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 77-ஆவது குடியரசு தினம் தில்லி கடமைப் பாதையில் திங்கள்கிழமை பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் அலங்கார ஊா்தி, ‘வளமிகு இந்தியா-சுயசாா்பு இந்தியா பசுமை’ என்ற கருப்பொருளுடன் இதில் பங்கேற்றது.

இந்நிலையில் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

சாணக்கியபுரி பகுதியில் உள்ள தமிழ்நாடு இல்லமானது தமிழக அரசின் அதிகாரப்பூா்வ இல்லமாகும், அங்கு மாநில விழாக்கள் அடிக்கடி நடைபெறும்.

குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுதல், கலாசார நிகழ்ச்சிகள் போன்றவை இங்கு நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆணஅடு குடியரசு தின விழா தமிழ்நாடு இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் குமாா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.

தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 8-ஆவது பட்டாலியன் காவல் மரியாதையுடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இல்ல வரவேற்பு அலுவலா் பரிமளாதேவி, முதுநிலைக் கணக்கு அலுவலா் திருமால், பொறியாளா் சதீஷ், விருந்தினா்கள் மற்றும் இதர தமிழ்நாடு இல்ல அலுவலா்கள் கலந்துகொண்டனா். விவில் பங்குகொண்ட குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.