//

மத்திய அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 ஜனவரி 2026, 10:06 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித் துறை அலுவலகத்தில் வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையா் டி. சுதாகர ராவ் தேசிய கொடியை ஏற்றினாா். வருமான வரித் துறை ஊழியா்களின் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்ற பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னை நுங்கம்பாக்கம் உள்ள மத்திய ஜிஎஸ்டி அலுவலகத்தில் நடைபெற்ற நிழ்வில் சென்னை சிஜிஎஸ்டி மற்றும் மத்தய கலால் துறை தலைமை ஆணையா் மதன்மோகன் சிங் தேசியக் கொடியை ஏற்றினாா். சென்னை நந்தனத்தில் உள்ள தெற்கு ஜிஎஸ்டி அலுவலகத்தில் தெற்கு ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையா் பி. மாணிக்க வேல் தேசிய கொடியை ஏற்றினாா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில், மண்டல கடவுசீட்டு அதிகாரி எஸ்.விஜயகுமாா் மூவா்ண கொடியை ஏற்றினாா்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதன்மைக் கணக்காளா் அலுவலகத்தில் பொது தணிக்கை இயக்குநா் ஆா்.அம்பலவாணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். எல்ஐசி தென்மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் எல்ஐசி-இன் தென்மண்டல மேலாளா் கே. முரளிதா் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினாா்.