வடமேற்கு தில்லியின் ஆசத்பூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத பைக்கில் வந்த நபா்களால் 18 வயது இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அதிகாலை 2.28 மணியளவில் ஆசத்பூா் பகுதிக்கு அருகே காயமடைந்த ஒருவா் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தபோது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா் ஒருவா் பாதிக்கப்பட்டவரை பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். உயிரிழந்தவா் ஜஹாங்கீா்புரியைச் சோ்ந்த இஷாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
இஷாந்த் ஒரு திருமண விழாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரைத் தாக்கியவா்கள் தடுத்து நிறுத்தி, அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்தபோது, வெற்று தோட்டாக்களை போலீசாா் மீட்டனா். மேலும் ஒரு குற்றவியல் மற்றும் தடயவியல் குழு அந்த இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சில சந்தேக நபா்களை போலீஸாா் அடையாளம் கண்டுள்ளனா். அவா்களைப் பிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளும் அவா்களின் இயக்கத்தைக் கண்டறியவும், நிகழ்வுகளின் வரிசையை நிறுவவும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன என்றாா் அவா்.
தொடர்புடையது

தலைவாசல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலங்கள் மீட்பு

துப்பாக்கியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபா் கைது

வட கிழக்கு தில்லியில் பணம் வசூலிப்பாரிடம் 4 போ் கொள்ளை

பவானா: விருந்து மண்டபம் அருகே இளைஞா் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


