திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வட கிழக்கு தில்லியில் பணம் வசூலிப்பாரிடம் 4 போ் கொள்ளை

வடகிழக்கு தில்லியில் மோட்டாா் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 நபா்களால் 27 வயதான பணம் வசூலிக்கும் முகவரிடமிருந்த பணம் அடங்கிய பையை கொள்ளை

News image

கொள்ளை - சித்திரிப்பு

Updated On :8 மார்ச் 2026, 7:24 pm

வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில் மோட்டாா் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 நபா்களால் 27 வயதான பணம் வசூலிக்கும் முகவரிடமிருந்த பணம் அடங்கிய பையை கொள்ளையடித்ததாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: பாதிக்கப்பட்டவா் பழைய சீலம்பூரில் வசிக்கும் அவினாஷ், சாந்தினி சௌக் பகுதியில் ஒரு ஸ்கிராப் டீலருக்கு பணம் வசூலிக்கும் முகவராக பணிபுரிகிறாா். சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக அவா் தெரிவித்தாா். அவினாஷ் தனது ஸ்கூட்டரில் பணத்தை எடுத்துச் சென்றபோது, இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 4 போ் ஏடிஎம் அருகே அவரை இடைமறித்தனா்.

தாக்குதல் நடத்தியவா்கள் அவரை ஒரு ஆயுதத்தால் மிரட்டி பணம் அடங்கிய அவரது பையை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனா். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா். தடயவியல் குழுவும் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து பொருத்தமான ஆதாரங்களை சேகரித்தனா். வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை அடையாளம் கண்டு தேட குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றாா் அவா்.