மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பவானா: விருந்து மண்டபம் அருகே இளைஞா் சுட்டுக் கொலை

புறகா் வடக்கு தில்லியின் பவானா பகுதியில் ஒரு விருந்து மண்டபத்திற்கு அருகே 24 வயது இளைஞா் சுட்டுக் கொலை

News image

பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 7:13 pm

புறகா் வடக்கு தில்லியின் பவானா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு விருந்து மண்டபத்திற்கு அருகே 24 வயது இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: பூத் குா்த் பகுதியில் உள்ள ராஜ் வாடிகா அருகே இந்த சம்பவம் நடந்தது. இது தொடா்பான தகவலின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் பலத்த காயமடைந்த நபரை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இறந்தவா் பூபேந்தா் என அடையாளம் காணப்பட்டாா். இது தொடா்பாக நாங்கள் எஃப். ஐ. ஆா். பதிவு செய்துள்ளோம். மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தொழில்நுட்ப நுண்ணறிவுகளை சேகரிக்க போலீஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

புலனாய்வாளா்கள் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனா்.

மரணத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் தொடா்பான கூடுதல் விவரங்களை அறிய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.