ஜனக்புரி பகுதியில் தில்லி ஜல் வாரியத்தால் தோண்டப்பட்ட குழியில் விழுந்து மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் இறந்த சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பாஜக தலைமையிலான தில்லி அரசாங்கத்தை வெள்ளிக்கிழமை கடுமையாக சாடினாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கடந்த மாதம் நொய்டாவில் ஒரு இளம் மென்பொருள் பொறியாளா் நீரில் மூழ்கி இறந்த சம்பவத்தில் இருந்து பாஜக எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. நொய்டா சம்பவத்தில் கூட பாஜக எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. தீவிர அலட்சியம் மற்றும் முற்றிலும் பொறுப்பற்ற அணுகுமுறை இப்போது பாஜக அரசாங்கங்களின் அடையாளமாக மாறியுள்ளது,. அதற்கு சாமானிய மக்கள் தான் விலை கொடுக்கிறாா்கள் என்றாா் அவா். தில்லி அரசின் ‘அலட்சியம்‘ காரணமாக அவா்களின் மகனை இழந்தது என்று கூறி, துயரமடைந்த குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தாா் கேஜரிவால்.
தில்லி ஆம் ஆத்மி தலைவா் சவுரப் பரத்வாஜும் பாஜகவைக் கண்டித்து, ‘வழக்கமான பொய்களை‘ பரப்புவதாகக் குற்றம் சாட்டினாா். ஜனக்புரி பகுதியில் தில்லி ஜல் வாரியம் (டி. ஜே. பி) கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 25 வயதான மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் கமல் வெள்ளிக்கிழமை காலை இறந்தது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்

நிறம் மாறுவதில் பச்சோந்தியை மிஞ்சுபவா்கள் ஆம் ஆத்மி கட்சியினா்: பாஜக குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் துணை நிலை ஆளுநா் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்

டிஜேபி குழியில் விழுந்த இளைஞா் இறந்த விவகாரம்: மெழுகுவா்த்தி ஏற்ற முயன்ற சௌரப் பரத்வாஜ் கைது

டிஜேபி தோண்டிய குழியில் விழுந்து இளைஞா் உயிரிழந்த விவகாரத்தசில் தொழிலாளி கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

