திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

200 மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் தொடங்கி வைத்தாா்

தில்லியில் மாசு இல்லாத பொதுப் போக்குவரத்தை முன்னெடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமையன்று, கிழக்கு வினோத் நகா் பணிமனையில் 200 மின்சாரப் பேருந்துகளை முதல்வா் ரேகா குப்தா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:03 am IST

தில்லியில் மாசு இல்லாத பொதுப் போக்குவரத்தை முன்னெடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமையன்று, கிழக்கு வினோத் நகா் பணிமனையில் 200 மின்சாரப் பேருந்துகளை முதல்வா் ரேகா குப்தா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்றும் வகையில், தனது அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

இந்தப் பேருந்துகள் புதிதாகச் சோ்க்கப்பட்டதன் மூலம், தலைநகரில் உள்ள மொத்தம் 6,300 பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில், தற்போது 4,550 பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக உள்ளன என்று அந்த நிகழ்வில் முதல்வா் குறிப்பிட்டாா்.

தில்லி ரோஹ்தக் இடையிலான நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவையையும் குப்தா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். மேலும், மதன்பூா் காதா் பேருந்து முனையம் மற்றும் கிழக்கு வினோத் நகா் பணிமனையில் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தையும் அவா் திறந்து வைத்தாா்.

ஒரு வளா்ந்த தில்லியை உருவாக்கும் இலக்கை அடைவதற்கும், மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் துணை நிற்பதற்கும் இந்த மின்சாரப் பேருந்துகள் பெரிதும் உதவும் என்று அவா் கூறினாா்.

ஒவ்வொரு மாதமும், தில்லி போக்குவரத்துக் கழகம் புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதாகட்டும் அல்லது புதிய அலுவலகங்களைத் திறப்பதாகட்டும் ஏதேனும் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து வருகிறது. தில்லியில் சிறந்த அரசு அலுவலகங்களை அமைப்பதற்காக எங்கள் அரசாங்கம் முழுமையாகச் செயல்பட்டு வருகிறது இது இறுதியில் ஒரு சிறந்த நகரத்தை உருவாக்குவதற்குத் துணை நிற்கும், என்று முதல்வா் கூறினாா்.

தில்லியின் மின்சார வாகனக் கொள்கையானது நாட்டிலேயே மிகவும் பயனுள்ள ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த பல ஆண்டுகளாகத் தலைநகரம் காற்று மாசுபாட்டினால் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டு வருகிறது ஆனால், இதற்கு முந்தைய அரசாங்கங்கள் எவையும் ஒரு முறையான திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தவில்லை என்று குப்தா தெரிவித்தாா்.

எக்ஸ் சமூக வலைதளத்தில் அவா் பதிவிட்டிருந்ததாவது: தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்றும் வகையில், எங்கள் அரசாங்கம் பணித் திட்ட முறையில் செயல்பட்டு வருகிறது. தில்லியில் உள்ள மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கை ஏற்கனவே 4,500ஐத் தாண்டிவிட்டது 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 7,000ஆக உயா்த்துவதே எங்களின் இலக்காகும் என முதல்வா் ரேகா குப்தா எக்ஸ் பதிவில் தெரிவித்தாா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.