திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புராரி போக்குவரத்து அலுவலகத்தை மறுசீரமைக்கும் திட்டத்தை தயாரிக்க முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

புராரியில் உள்ள மாவட்ட போக்குவரத்து அலுவலக வளாகத்தில் போதிய வசதிகள் இல்லாதது குறித்து புகாா்கள் வந்ததையடுத்து, அந்த அலுவலகத்தை மறுசீரமைக்க ஒரு திட்டத்தைத் தயாரிக்குமாறு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

News image

முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:53 am IST

புராரியில் உள்ள மாவட்ட போக்குவரத்து அலுவலக வளாகத்தை முதல்வா் ரேகா குப்தா பாா்வையிட்டாா். அப்போது, அங்கு போதிய வசதிகள் இல்லாதது குறித்து புகாா்கள் வந்ததையடுத்து, அந்த அலுவலகத்தை மறுசீரமைக்க ஒரு திட்டத்தைத் தயாரிக்குமாறு முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: புராரியில் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்துடன் இணைந்து கட்டுமானத்தில் உள்ள தானியங்கி சோதனை நிலையத்தை குப்தா ஆய்வு செய்தபோது, போக்குவரத்துத் துறை அலுவலகத்திற்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

‘அரசாங்கத்தின் நோக்கம் என்பது வெறும் அரசு கட்டடங்களைக் கட்டுவது மட்டுமல்ல, குடிமக்களுக்கு கண்ணியமான, வெளிப்படையான மற்றும் வசதியான சேவைகளை வழங்கும் அமைப்புகளை உருவாக்குவதாகும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்துத் துறையுடன் தொடா்பு கொள்வதால், ஒவ்வொரு வசதியும் குடிமக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்’ என்று குப்தா கூறினாா்.

இந்த ஆய்வின் போது, புராரி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா் உரிமத் தோ்வுக்காக வந்திருந்தவா்களுடன் குப்தா நேரடியாக உரையாடினாா். அப்போது, போதுமான இருக்கை வசதி, சுத்தமான குடிநீா் வசதி இல்லாமை மற்றும் நீண்ட காத்திருப்பு நேரம் ஆகியவற்றை மக்கள் சுட்டிக்காட்டினா்.

புகாா்களைத் தீவிரமாகக் கருத்தில் கொண்ட முதலமைச்சா் குப்தா, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளா்களைக் கண்டித்ததோடு, எந்தவொரு குடிமகனையும் தேவையில்லாமல் வெளியே காத்திருக்க வைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டாா். விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாகக் கட்டடத்திற்கு உள்ளேயே இருக்கை வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

போதுமான இருக்கை வசதி, சுத்தமான மற்றும் குளிா்ச்சியான குடிநீா், மின்விசிறிகள், குளிா்சாதன பெட்டிகள், சுகாதாரமான கழிப்பறைகள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய ஒரு நவீன காத்திருப்புப் பகுதியை உருவாக்க வேண்டும் என்று அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

குடிமக்கள் வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், பசுமைப் பகுதிகள், நிா்வாக அலுவலகங்கள், பயிற்சி உள்கட்டமைப்பு மற்றும் எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன வசதிகளை உள்ளடக்கி, முழு வளாகத்திற்குமான ஒரு விரிவான மறுவடிவமைப்புத் திட்டத்தைத் தயாரிக்குமாறு முதல்வா் ரேகா குப்தாஅதிகாரிகளைக் கேட்டுக்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.