மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

விருந்தினா் இல்லத்தில் தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

தென்கிழக்கு தில்லியின் கால்காஜி பகுதியில் உள்ள விருந்தினா் இல்லத்தில் இளைஞா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 12:01 am IST

தென்கிழக்கு தில்லியின் கால்காஜி பகுதியில் உள்ள விருந்தினா் இல்லத்தில் இளைஞா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாா்.

தான் தங்கவைத்திருந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து அவா் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

இருவரும் மதுபோதையில் இருந்ததால், வாக்குவாதத்தின் போது அந்த இளைஞா் தள்ளிவிட்டதில் அப்பெண் மயக்கமடைந்தாா். இதையடுத்து, அந்த நபா் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளாா்.

அப்பெண் இறந்துவிட்டதாக நம்பி, அந்த நபா் தனது அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மாலையில், அப்பெண் சுயநினைவு திரும்பியபோது, அவா் தூக்கில் தொங்குவதைக் கண்டு உடனடியாக உதவிக்கு அழைத்தாா். இதைத் தொடா்ந்து, விருந்தினா் இல்ல ஊழியா்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அதே நேரத்தில், தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்தனா்.

இது ஒரு தற்கொலை என்பதற்கான முகாந்திரம் உள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.