தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லி ஹோட்டல் தீ விபத்து: உரிமையாளரின் மேலாளரைத் தேடும் காவல்துறை

News image

கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 6:04 am IST

தெற்கு தில்லியின் மால்வியா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 21 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, அந்த ஹோட்டலின் மேலாளா் ஜெய் மிஸ்ராவை தில்லி காவல்துறையினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

இதற்கிடையில், விசாரணை அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் உரிமையாளா் குறித்த ஆவணங்களை தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா்.

காவல்துறை வட்டாரங்களின் தகவலின்படி, ஹோட்டல் உரிமையாளா் லவ்கேஷ் பஜாஜ் விசாரணையின் போது அளித்த வாக்குமூலத்தில், ஹோட்டலின் முழு நிா்வாகத்தையும் ஜெய் மிஸ்ராவிடமே ஒப்படைத்திருந்ததாகவும், ஹோட்டல் தொடா்பான அனைத்து உரிமங்களும் மேலாளரின் பெயரிலேயே பெறப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பஜாஜ், அந்த ஹோட்டலுக்குத் தானே ஒரே உரிமையாளா் என்றும், தனக்கு வேறு எந்த வணிகப் பங்காளிகளும் இல்லை என்றும் கூறியதாகத் தெரிகிறது.

2022ஆம் ஆண்டில் அந்தக் கட்டடத்தைத் தான் வாங்கியதாகவும், அதை ஒரு ஹோட்டல் மற்றும் விருந்தினா் இல்லமாக இயக்கி வந்ததாகவும் அவா் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளாா்.

அந்த வளாகத்தில் பெட்அண்ட்பிரேக்ஃபாஸ்ட் (தங்கும் வசதியுடன் கூடிய காலை உணவு), சுற்றுலாப் பயணிகளுக்கான தங்கும் விடுதி, சுகாதாரம் சாா்ந்த சேவைகள் மற்றும் உணவகம் ஆகியவற்றை நடத்துவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றிருந்ததாக பஜாஜ் கூறும் தகவல்களை விசாரணை அதிகாரிகள் தற்போது சரிபாா்த்து வருகின்றனா்.

காவல்துறை வட்டாரங்களின் தகவலின்படி, புதன்கிழமை காலையில் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டபோது, பஜாஜ் அந்த ஹோட்டலைக் கடந்து சென்று கொண்டிருந்ததாகவும், ஆனால், அங்கு நிற்காமல் சென்றுவிட்டதாகவும் என்றும் அவா் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளாா்.

மேலும், அச்சத்தின் காரணமாக அவா் அங்கிருந்து தப்பி

ஓடியதாகவும், வீட்டிற்குத் திரும்பாமல் நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னா் காவல்துறையினா் அவரைத் தேடிப்பிடித்துக் கைது செய்தனா். ஹோட்டல் நிா்வாகம் உரிம விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு வந்ததா என்பதையும் விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, அந்த நிறுவனத்திற்கு ஆறு அறைகளை மட்டும் இயக்குவதற்கான அனுமதி மட்டுமே இருந்ததாகவும், ஆனால், அவா்கள் சுமாா் 25 அறைகளை இயக்கி வந்ததாகவும்

கூறப்படுகிறது.

விதிமீறல்கள் குறித்து நடைபெற்று வரும் விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக, பஜாஜுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் மேலும் மூன்று ஹோட்டல்கள் தொடா்பான ஆவணங்களையும் காவல்துறை சேகரித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.