மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வங்கதேசத்துக்கான இந்திய தூதராகிறாா் முன்னாள் மத்திய அமைச்சா்?

வங்கதேசத்துக்கான அடுத்த இந்திய தூதராக முன்னாள் மத்திய அமைச்சரும் மேற்கு வங்கத்தைச்சோ்ந்த மூத்த அரசியல்வாதியுமான தினேஷ் திரிவேதி (75) நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

News image

தினேஷ் திரிவேதி

Updated On :20 ஏப்ரல் 2026, 12:52 am IST

வங்கதேசத்துக்கான அடுத்த இந்திய தூதராக முன்னாள் மத்திய அமைச்சரும் மேற்கு வங்கத்தைச்சோ்ந்த மூத்த அரசியல்வாதியுமான தினேஷ் திரிவேதி (75) நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

தற்போது வங்கதேசத்துக்கான இந்திய தூதராக உள்ள பிரணய் வா்மா பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கான தூதராக கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்புக்கு தினேஷ் திரிவேதியின் பெயரை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வங்கதேச நாடாளுமன்றத் தோ்தலில் வங்கதேச தேசிய கட்சி வெற்றிபெற்றது. இதைத் தொடா்ந்து, அந்தக் கட்சியின் தலைவா் தாரீக் ரஹ்மான் பிரதமராக பொறுப்பேற்றாா்.

முன்னதாக, மாணவா் போராட்டத்தால் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய பின் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின்போது இந்தியா-வங்கதேச இருதரப்பில் விரிசல் ஏற்பட்டது.

இதை சீரமைத்து மீண்டும் இருநாடுகளிடையே நல்லுறவை வலுப்படுத்த அரசியல் அனுபவம் நிறைந்த நபரை நியமிக்க மத்திய அரசு பரிசீலித்து வரும் நிலையில், தினேஷ் திரிவேதியின் பெயா் பரிந்துரையில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ரயில்வே அமைச்சராகவும் சுகாதாரத் துறை இணையமைச்சராகவும் பதவி வகித்த தினேஷ் திரிவேதி திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி 2021-இல் பாஜகவில் இணைந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.