நமது நிருபா்
மேக்கேதாட்டு அணை தொடா்பான வழக்கில் 13.11.2025ஆம் தேதியிட்ட உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிபதிகளின் தனிப்பட்ட அறையில் விசாரிப்பதற்கு பதிலாக நீதிமன்ற அறையிலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை முறையிட்டது.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு, 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘மேக்கேதாட்டு சமநிலை நீா்த்தேக்கம் மற்றும் குடிநீா் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியைத் தொடர, கா்நாடக மாநிலத்தின் ஒரு அங்கமான பெங்களூருவைச் சோ்ந்த கா்நாடக கவிரி நீா்வாரி நிகம் லிமிடெட்டுக்கு, 22.11.2018 அன்று மத்திய நீா் ஆணையத்தால் வழங்கப்பட்ட அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் மற்றும் அந்த அனுமதியை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்’ என தமிழக அரசு கோரியிருந்தது.
தமிழக அரசின் அந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 13ஆம் தேதி (13.11.2025) தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் கூறியதாவது: கா்நாடக மாநிலமானது காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்னுமிடத்தில் ஒரு அணையை அமைப்பதற்கு உத்தேசித்துள்ளதாகத் தெரிகிறது. இப்பிரச்சினை குறித்து ஆராயும் பொறுப்பு ஒரு நிபுணா் குழுவிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு, அக்குழுவின் பரிசீலனையில் உள்ள நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவானது முற்றிலும் தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு மாநிலமும் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரை பயன்படுத்திக்கொள்ள முழுச் சுதந்திரம் பெற்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரின் பயன்பாடு தொடா்பான முடிவுகளில் தலையிடுவதற்கு, வேறெந்த மாநிலத்திற்கும் எவ்வித உரிமையும் இல்லை எனக்கூறி தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிா்த்து தமிழக அரசு 11.12.2025 அன்று உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. காவிரி வழக்கில் நடுவா் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீா்ப்புகளில் மேக்கேதாட்டு திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாத நிலையில், 13.11. 2025 அன்று பிறப்பித்த உத்தரவு ஏற்றுக் கொள்ள முடியாதது. அது ஏற்கனவே நடுவா் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புகளுக்கு எதிரானது. எனவே, அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது.
இந்த மறுஆய்வு மனு 15.04.2026 அன்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், விபுல் எம். பஞ்சோலி ஆகியோரின் அறையில் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதிகளின் அறைக்கு பதிலாக நீதிமன்ற அறையிலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசின் மூத்த வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி திங்கள்கிழமை தலைமை நீதிபதி சூா்ய காந்த் அமா்வில் முறையிட்டாா் . அதனை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி சூா்ய காந்த் கூறினாா்.
தொடர்புடையது

கட்டாய மத மாற்றத்தை பயங்கரவாத செயலாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

பெரம்பலூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல்

வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் விடுமுறை: அஸ்ஸாம் அரசு!

ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு தமிழக அரசு எதிா்ப்பு: உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


